விபத்தில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞனுக்கு 37 இலட்சம் காப்பீடு!

644shares

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் "அ" னா பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவர் கடந்த எட்டாம் மாதம் 04 ஆம் திகதி புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தின் போது உயிரிழந்துள்ளார்.

இவர் ஆர்.பி.கோ. காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்துள்ளமையினால் இவரின் உயிரிழப்பு காப்புறுதி பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு ஒன்று புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் நடைபெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பு.கவியரன் என்ற இளைஞனுக்கான ஆர்.பி.கோ காப்புறுதி நிறுவனத்தின் சார்பில் வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.

காப்புறுதி நிறுவனத்தின் உத்தியோகத்தர் இ.றாகுலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முப்பத்தி ஏழு இலட்சத்தி இரண்டாயிரத்தி எண்ணூறு ரூபா பெறுமதியான காசேலையினை ஆர்.பி.கோ காப்புறுதி நிறுவனத்தின் முல்லைத்தீவு முகாமையாளர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சிரேஸ்ட வைத்திய கலாநிதி கை.சுதர்சன் ஆகியோர் பெற்றோரிடம் கையளித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆர்.பி.கோ காப்புறுதி நிறுவனத்தின் முதன் முதல் உயிரிழப்பு காப்புறுதி கொடுக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க