காலைக்கழற்றி பிச்சை எடுத்தால் யாருக்கு அவமானம்? உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் தமிழன்!

51shares

தாயகத்தில் யுத்த வடுக்களை இன்றும் சுமந்து வாழும் மக்கள் மீளெழுச்சி பெறுவதற்கான சிறந்த தொழில்வாய்ப்புக்களோ வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்துவதற்கான போதிய வருமானமோ இல்லாது தமது வாழ்வாதாரத்தை நடாத்திச் செல்கின்றனர்.

இவ்வாறன நிலையில், தன்னைப் போன்று தன்னினமும், முன்னேற வேண்டும் என்பதற்காக, தன்னிறைவான பொருளாதாரம் இல்லையென்றாலும் அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் தனது சுயதொழில் கிடைக்கும் வருமானங்களை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனமுவந்து கொடுத்து உதவிசெய்து வரும் மனித நேயம் மிக்க மனிதரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

அந்த வகையில் பொத்துவில் அம்பாறையை தனது சொந்த இடமாக கொண்டாலும் சூழ்நிலை காரணமாக யுத்த காலத்திற்கு முன்னர் வன்னிப் பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தவர் தான் யூஸ் கடை ரமேஸ். இவர் வன்னிப் பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்த நிலையில், ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்தம் காரணமாக கண்ணி வெடியில் தனது ஒற்றைக் காலை இழந்து தற்போது செயற்கை கால் பொருத்தப்பட்ட நிலையில், வாழ்ந்து வருகின்றார்.

இவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் நிலையில், யாழ் காங்கேசந்துறை வீதி சிவலிங்கப்பளியடிப் பகுதியில் இன்பத்தேன் இயற்கைப் பழச்சாறு எனும் பெயரில் ஒரு யூஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவரது கடையில் வேலைக்கமர்த்தியிருப்பவர்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாதாந்த வருமானமாக 60 ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் கடையில் கிடைக்கும் வருமானத்தை தனது வங்கிக் கணக்கில் சேமிக்காது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வறுமையில் வாடும் மக்களுக்கு சுயதொழில் ஆரம்பித்துக் கொடுத்து உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இவரின் வாழ்க்கை முறை மற்றும் சேவைகள் தொடர்பில் அவரே கூறும் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.