நீர்கொழும்பில் இடம்பெற்ற கோர சம்பவம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் அவலம்!

88shares

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளிஹேன வீதியில் ஏத்கால பகுதியில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரும், மகனும் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் 33 வயதுடையவர் என்றும் படுகாயமடைந்த தாயார் 60 வயதுடையவர் எனவும் மற்றும் உயிரிழந்த பெண்ணின் 9 வயதுடைய மகளும் படுகாயங்களுடன் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது தாயாருடனும் மகளுடனும் ஏத்கால பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டம் ஒன்றை பராமரிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அந்த தோட்டத்திலுள்ள சிறிய வீடு ஒன்றில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.