வரலாறு காணாத மக்கள் கூட்டத்தில் மன்னிப்பு கோரினார் சஜித்

  • Dias
  • October 11, 2019
1193shares

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் திரண்டிருக்கின்றனர்.

கொழும்பு – காலி முகத்திடலிலும் அதேபோல அதனை அண்மித்த பல பகுதிகளிலும் மக்கள் வெள்ளம் நிரம்பியிருப்பதாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

முதற்தடவையாக சஜித் பிரேமதாஸவின் தாயார் ஹேமா பிரேமதாஸவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் புத்தரின் நாவுக்கு நிகராக தனது நாவின் வார்த்தைகளை சமப்படுத்தி வெளியிட்டமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.