இலங்கை வரலாற்றில் தமிழுக்கு கிடைத்த முன்னுரிமை!

554shares

எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்துக்கான செயற்பாடுகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரச திணைக்களங்களில் சிங்கள பிரதேசங்களில் சிங்கள மொழிக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கப்படும்.அதேபோன்று தமிழ் பிரதேசங்களில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

தென்பகுதியில் அமைந்துள்ள கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கூட முதலில் சிங்கள மொழியும் இரண்டாவதாக தமிழும் மூன்றாவதாக ஆங்கிலமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள சர்வதேச செயற்பாடுகள் நடைபெறவுள்ள ஒரு இடத்தில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...