மலையகத்தில் பிற்பகல் வேளையில் கடும் மழையுடன் கூடிய காலநிலை கானப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
13.10.2019 ஞாயிற்றுகிழமை பிற்பகல் வேளையில் பெய்த கடும் மழையினால் கண்டி மாவட்டம் நாவலபிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
நாவலபிட்டி நாகரில் மூன்று அடி உயரத்திற்கு வெள்ள நீர் கானப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் .
இன்று ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் நாவலபிட்டி கம்பளை பிராதன வீதியின் போக்குவரத்தும் பாதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெய்த கடும் மழையினால் நாவலபிட்டி நகரில் உள்ள கால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததன் காரனமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.