யாழில் காணாமற்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்.

871shares

கடந்த நான்கு நாட்­க­ளாக காணா­மற்­போ­யி­ருந்த பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன், இணுவில் சின்னப் பள்­ளிக்­கூடம் பகு­தியில் நேற்றுக்காலை 10 மணி­ய­ளவில் நட­மா­டிய வேளை பொது மக்­களால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்டநிலையில் சுன்­னாகம் பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைக்குட்ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

உடுவில் அம்­ப­ல­வாணர் வீதியைச் சேர்ந்த சுந்­த­ர­லிங்கம் ஜனுக்சன் (வயது -16) என்ற மாண­வனே இவ்­வாறு காணா­மல் ­போ­யி­ருந்தார்.

குறித்த மாணவன் வீட்­டி­லி­ருந்து கடந்த 10ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை, மருந்து எடுப்­ப­தாகக் கூறிச் சென்­ற ­நி­லையில் இரவு வரை வீடு திரும்­பா­ததால் மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை தாயார் சுன்­னாகம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செதிருந்தார்.

இந் நிலையில் 4 நாட்­களின் பின்னர் நேற்றுக்காலை 10 மணி­ய­ளவில் இணுவில் சின்னப் பள்­ளிக்­கூடம் பகு­தியில் மாணவன் நட­மா­டிய வேளை பொது மக்­களால் அடை­யாளம் காணப்­பட்டு உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

பொலிஸ் விசா­ர­ணை­க­ளுக்­காக அவர் தற்­போது சுன்­னாகம் பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

தான் கடந்த 4 நாட்­க­ளாக யாழ்ப்­பாணம் நகரில் உள்ள தனியார் விடு­தியில் தங்­கி­யி­ருந்த­தாக குறிப்­பிடும் மாணவன், யார் அழைத்துச் சென்றார்கள் அல்லது யாருடன் தங்கியிருந்தார் உள்ளிட்ட மேலதிக தகவல்களை தெரிவிக்கிறார் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி