சிறிலங்காவில் 60 பேரின் உயிருடன் விளையாடிய சாரதி! புத்திசாலித்தனமாக செயற்பட்ட பயணி

918shares

இலங்கை போக்குவரத்து சபையின் கடுபெத்த பேருந்து சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்து பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மிகவும் வேகமாக பயணித்ததன் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்தே குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பேருந்து சாரதிக்கு நிறுத்தும் சமிக்ஞையை காட்டிய போதும், அதிக வேகம் காரணமாக சுமார் 300 மீற்றர் வரையில் பயணித்ததன் பின்பே பேருந்து நிறுத்தப்பட்டது.

இதன்போது, குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பேருந்திலிருந்து ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது சுமார் 60 பயணிகள் பேருந்துக்குள் இருந்துள்ளனர்.இருப்பினும், பேருந்தின் சாரதி 2 மணி நேரத்திற்கு பின் பொலிஸில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி