கடற்படை ரோந்து நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சிதைந்த சடலம்!

30shares

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது.

மேற்கு கடற்படை கட்டளை பிரிவு, கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிதைந்த நிலையில் நீரில் மிதந்த குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். சடலத்தை உடனடியாக கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க