வவுனியா புளியங்குளம் பகுதியில் இரவு வேளை ஏற்பட்ட பதற்ற நிலை! போத்தலால் தாக்கிய நபர்!

59shares

வவுனியா புளியங்குளம் பொலிசாரினால் இளைஞர்கள் நான்கு பேர் நேற்று இரவு கைது செய்யபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர்கள் தங்களுக்குள் முரண்பட்டுகொண்ட நிலையில், ஒருவர் போத்தல் ஒன்றால் தனது கையை தானே தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கபடுகின்றது.

இதனால் காயமடைந்த நபரை புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஏனைய இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

இதன் போது வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்ட , வைத்தியருக்கும், குறித்த இளைஞர்களிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த முரன்பாடு தொடர்பாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கபட்டது.

வைத்தியசாலைக்கு சென்ற பொலிசார் அங்கு நின்ற இளைஞர்கள் இருவரை கைதுசெய்து பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் மேலும் இருவர் உட்பட நான்கு பேரை கைதுசெய்திருந்தனர்.

கைது செய்யபட்டவர்களை பார்பதற்காக இளைஞர்களின் உறவினர்கள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது பொலிசார் தம்மை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றும், எமது பிள்ளைகளை பொலிசார் கடுமையாக தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

கைது செய்யப்பட்டவர்கள் மது போதையில் இருந்ததாக பொலிசார் கூறுகின்றனர். அப்படியானால் மது போதையில் நிற்பவர்களை அழைத்து சென்று பொலிசார் கடுமையாக தாக்குவது சரியா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனால் சற்று நேரம் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க