ஹிஸ்புல்லாவிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையே இரகசிய ஒப்பந்தம்!

37shares

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கும் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, அந்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ள விடயமானது இரு தரப்பிற்கும் இடையிலான ஒப்பந்தத்ததை அம்பலப்படுத்தி இருப்பதாக கூறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வெற்றிபெற முடியாது எனத் தெரிந்தும் தேர்தலில் களமிறங்கியமைக்கான காரணத்தை ஹிஸ்புல்லாஹ்வும் முஸ்லீம் சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சஜித் பிரேமதாசவின் தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

ஹிஸ்புல்லாவிற்கும் - பெசில் ராஜபக்சவிற்கும் இடையிலான ஒப்பந்தம் என்ன? தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெரியளவு நிதி எங்கிருந்து கிடைத்தது. இந்த நாடடு முஸ்லிம் மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியாக முடியாது, தான் தோல்வியடைவது தெரிந்தும் அவர் ஏன் முன்னிலையானார். கனவில் கூட அவரால் வெற்றிபெற முடியாது. அவ்வாறு இருக்கையில் அவரது நோக்கம் தான் என்ன? 10000 அல்லது 15000 முஸ்லிம் வாக்குகளைப் பெற்று அவர் ஆடவுள்ள நாடகம் தான் என்ன? மேலும் முரண்பாடுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்துவதா அவரது நோக்கம்? இனவாத சிந்தனையை இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் மனதில் விதைக்கவா அவர் முன்னிலையாகியுள்ளார் எனக் கேட்கத் தோன்றுகிறது”.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் நோக்கிலேயே கோட்டாபய ராஜபக்சவுடன் அவர் இணைந்துகொண்டிருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.

“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கும் வாக்குகளை குறிப்பிட்ட அளவு குறைக்கும் நோக்கில் அல்லது எமக்கு கிடைக்கும் வாக்குளை திசைத்திருப்பும் நோக்கிலேயே ஹிஸ்புல்லா ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகியுள்ளார் என்பது இன்று வெளிப்பட்டுள்ளது. எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்த விடயம் ஊடாக மாத்திரம் இது உறுதியாகவில்லை. ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் தொடர்ச்சியாக ஊடகங்கள் மூலமாக தற்போதை அரசாங்கத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். கோட்டாயபய ராஜபக்ச தொடர்பிலோ, மஹிந்த ராஜபக்ச தொடர்பிலோ அவர் எவ்வித குற்றச்சாட்டையும் விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. இன்று கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து தன்னை பாதுகாக்கும் வகையில் அவர் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக முன்னிலையாகியுள்ளார். அவர் அமைத்த பல்கலைக்கழகம், அதற்காக அவருக்கு கிடைத்த நிதி மூலம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்துள்ளது. ஆகவே இந்த விடயங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கு அவர் இணக்கப்பாட்டுடன் கோட்டாவுடன் இணைந்துகொண்டுள்ளதாகவே எண்ணத்தோன்றுகின்றது.”

தமிமீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு பொதுஜன பெரமுனவினர் வழங்கிய வாக்குறுதிகளையும் பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

“பிள்ளையானுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் என்ன? கருணா அம்மானுடனான ஒப்பந்தம் என்ன? அவர்களுடனான இணக்கப்பாடு என்ன? அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் என்ன? ஹிஸ்புல்லாவுடனான ஒப்பந்தம் என்ன? அதிகாரத்திற்கு வந்ததும் மீண்டும் பல்கலைக்கழகத்தை பெற்றுத்தருவதாக ஏதும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதா? சட்டவிரோதமாக இந்த நாட்டிற்கு வரவழைப்பப்பட்ட பணம் தொடர்பிலான குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவிப்பதாக வாக்குறுதி ஏதும் வழங்கப்பட்டுள்ளதா? என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!