இன்னும் இருப்பது 35 நாட்கள் மாத்திரமே; எதிர்வரும் 16ஆம் திகதி இரவு மொட்டு மலரும்!

39shares

நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் இன்னும் 35 நாட்களில் முடிவடையும் அதேவேளை எதிர்வரும் மாதம் 16 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சியின் அரசாங்கம் மலரும் என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீமலவீர திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திற்கான பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளரும், கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான கே.புஸ்பகுமார் இனியபாரதியின் தலைமையில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற திறப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்து இருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜக்கிய தேசிய கட்சியின் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தயவில் கடந்த நாலரை வருடங்களை கடந்து வந்துள்ளது. இந்த ஜக்கிய தேசிய கட்சியின் நல்லாட்சி அரங்கத்திற்கு தொடர்ந்தும் சம்பந்தன் , சுமந்திரன் முட்டுக் கொடுத்து கொண்டு வருகின்ற போதிலும் தமிழ் மக்களுக்கான அரச தொழில்கள் மற்றும் அபிவிருத்திகள் போன்றன செய்து கொடுக்கப்படவில்லை.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் 70 வருடங்களாக துன்பப்பட்டு வருகின்ற போதிலும் இன்றுவரை அவர்களுக்காக நிம்மதியாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் தமிழ் தலைவர்களால் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணைந்து கொண்டு முஸ்லிம் மக்களுக்கான அனைத்த விடையங்களையும் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார். எனவே தமிழ் மக்கள் அவரை நம்பி மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிக் பெறச் செய்ய வேண்டும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி தான் நிச்சயம் வெற்றி பெறும் நாட்டில் உள்ள அனைத்த மாவட்டங்களிலும் மொட்டு கட்சியையே மக்கள் அதரித்து வருகின்றனர்.

தற்போது நடத்து முடிந்த எல்பிட்டி பிதேசசபை தேர்தல் முடிவுகள் சிறந்த எடுத்தக் காட்டாக அமைந்துள்ளன. தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நம்பி உங்கள் வாக்குகளை மொட்டுக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபயவுக்கு வழங்குங்கள் நிச்சயமாக உங்களுக்கு வேண்டியதை நாம் செய்து கொடுப்போம் என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்கா மேலும் தெரிவித்து இருந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் இனியபாரதி, எஸ்.செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினரான வீரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டு இருந்ததுடன், இனிய பாரதி அங்கு உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கூடிய ஒரே ஒரு கட்சி பொதுஜன பெரமுன கட்சியும் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷாவினாலும் மட்டுமே முடியும் என கருத்துக்கள் தெரிவித்து இருந்ததுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி