புத்தளத்தில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார்! சிக்கிய நபர்கள்!

62shares

சிலாபம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரும் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 18 வயதுடைய மூவரும், ஏனையவர்கள் 19, 32 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹோட்டலில் சட்டவிரோதமாக சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், விசாரணைகளை ஆரம்பித்ததாக சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் தங்கியிருந்த குறித்த ஹோட்டலில் விஷேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அங்கு தங்கியிருந்த ஆறு சந்தேக நபர்களும், வெவ்வேறான தகவல்களை வழங்கியதாகவும், அதனை அடுத்து நபர்கள் சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரும் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு அனுப்பி வைக்கும் நோக்கில் குறித்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க