கோட்டாவிற்கு ரவி கருணாநாயக்க விடுத்துள்ள சவால்!

56shares

ஸ்ரீலங்காவின் தேசிய பிரச்சனைக்கு ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப் பரவலாக்களை செய்வோம் என்பதை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் பகிரங்க மேடைகளில் முடிந்தால் அறிவிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்துள்ளது.

வடக்கிற்கும், தென்னிலங்கைக்கும் ஒரே விடயத்தையே ஐக்கிய தேசியக் கட்சி கூறி வருவதாகவும் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் சிங்கள மக்கள் மத்தியில் ஒன்றையும், தமிழ் மக்களுக்கு மற்றுமொன்றையும் கூறித்திரிவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவிற்கு சார்பாக முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் தனது தொகுதியில் புதிய பிரசார அலுவலகம் ஒன்றைத் திறந்துவைத்தார்.

இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்பொன்றையும் நடத்திய அவர், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கிவரும் பொதுஜன பெரமுனவினர் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் வெவ்வேறான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவருவதாக குற்றம்சாட்டினார்.

“ஐக்கிய தேசியக் கட்சியானது கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை உட்பட வடக்கிலும் ஒரே விடயத்தைதான் அறிவிக்கும். ஒற்றையாட்சிக்குள் உச்சகட்ட அதிகாரப் பரவலை செய்து அனைத்து இன மக்களும், சிங்களம், தமிழ், முஸ்லிம், பரங்கியர் என அனைவருக்கும் இது எமது நாடு என்கிற உணர்வை ஏற்படுத்தி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே நாங்கள் தயாராகி வருகின்றோம். இதனை எமது எதிர்தரப்பினரால் பகிரங்க மேடைகளில் கூறமுடியுமா? அவர்களால் அறிவிக்க முடியுமா? அவர்கள் கொழும்புக்கு ஒன்றும், மகாநாயக்க தேரர்களுக்கு இன்னுமொன்றும் கூறிவிட்டு இரகசியமாக வடக்கிற்குச் சென்று வித்தியாசமான ஒன்றைக் கூறுபவர்கள். நாங்கள் அப்படியல்ல. மிகவும் திறந்த மனதுடன் செயற்படுகின்றவர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்