யாழ்.சர்வதேச விமானநிலையத்தில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள்!

187shares

எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே, அவர் இதனை கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மாகாணத்திலேயே எமது இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க