வீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார்! கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து

716shares

பதுளை - ரிதிமாலியத்த பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் பெண் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

ரிதிமாலியத்தையை அண்மித்த பகுதியில் வீடொன்றினை சுற்றிவளைத்து பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது குறித்த வீட்டில் படுக்கை அறையில் உள்ள கட்டில் ஒன்றிற்கு அடியில் பசளைப் பை ஒன்றை மீட்டு சோதனையிட்டனர்.

அப்போது அந்த பொதிக்குள் ஐந்து துப்பாக்கிகள் இருப்பதைக்கண்டு அவற்றினை பொலிஸார் மீட்டனர்.

அத்துடன் அத்துப்பாக்கிகளுக்கு உரிமையாளரென்று கருதப்பட்ட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இத்துப்பாக்கிகள் அனைத்தும் அனுமதிப் பத்திரமற்ற சட்ட விரோதமானவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின்னர் மகியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்