மின்னல் தாக்கத்திலிருந்து மயிரிழையில் தப்பிய விவசாயி -வீடு முற்றாக நாசம்!

33shares

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மணல்சேனை பகுதியில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவரின் வீடு இன்று செவ்வாய்க்கிழமை(15) அதிகாலை மின்னல் தாக்கியதில் பாரிய சேதமடைந்துள்ளது.

வீட்டில் இருந்து நண்பருடன் அதிகாலை வேளையில் தனது சேனைக்குள் வேலை செய்வதற்காக எழுந்து முற்றத்தில் நின்றவேளை பாரிய வெளிச்சத்துடன் சத்தம் கேட்ட போது வீடு உடைந்து சிதறியதாக வீட்டின் உரிமையாளர் பொன்னுத்துரை ஜெகநாதன் என்ற அந்த விவசாயி தெரிவித்தார்.

இதனையடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது மின்னல் தாக்கியுள்ளதை அறிந்து கொண்டதுடன் வீட்டின் கூரை ஓடுகள் உடைந்த நிலையில் வீசப்பட்டு இருந்ததுடன் வீட்டினை சுற்றி அடைத்திருந்த பலகைகளும் உடைந்து சுக்குநூறாக காணப்பட்டன.தான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவத்தினை அறிந்து குறித்த இடத்திற்கு பொத்துவில் பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தருமராஜா சுபோதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி