இலங்கையில் இப்படியுமொரு சம்பவம் : பெற்றோருக்கு எதிராக யுவதியொருவர் தாக்கல் செய்த வித்தியாசமான மனு!

118shares

வீட்டில் தனது பெற்றோரால் பல விடயங்களில் வலுகட்டாயமாக நிர்ப்பந்திக்கப்படுவதாக ரெிவித்து, யுவதியொருவர் தாக்கல் செய்த மனுவில், யுவதியை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (13) தீர்ப்பளித்துள்ளது.

24 வயதான யுவதியொருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.திருமணம் செய்து கொண்டு, வீட்டோடு குடியிருக்கும்படி பெற்றோர் கடுமையாக வற்புறுத்தி துன்புறுத்தியமைக்கு எதிராகவே மனுத் தாக்கல் செய்திருந்தார் யுவதி.

கொழும்புக்கு வெளியிலுள்ள கிராமமொன்றை சேர்ந்த இந்த யுவதி, வெளிநாட்டில் உயர்கல்வியை முடித்துக் கொண்டு அண்மையில் இலங்கைக்கு திரும்பியுள்ளார். வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்னர், தனக்கும் தனது பெற்றோரின் வாழ்க்கை முறைக்குமிடையில் பெரிய வித்தியாசங்கள் இருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு வேலைக்கு செல்வதை கடுமையாக எதிர்த்த பெற்றோர், விபச்சாரிகள்தான் நகரத்திற்கு வேலைக்கு செல்வார்கள் என வாய் மொழி மூலம் தன்னை துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.2018இல் நினைவிழப்பை குணமாக்க சிகிச்சை பெற்றதாகவும், அதன் பின்னர் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி தன்னை திருமணம் செய்து வைத்ததாகவும், தற்போது அதிலிருந்து விலகி சுயாதீனமாக வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தந்தை தனது அலுவலகத்திற்கு வந்து, தனது நண்பர்களுடன் சண்டையிடுவதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான், யுவதி சுயாதீனமாக வாழ உரித்துடையவர் என குறிப்பிட்டார். அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிசாருக்கு உத்தரவிட்டார். அவரது குடியிருப்பிற்குள் நுழையவோ, வேலைக்கு செல்லவோ தடைவிதிக்க கூடாதென பெற்றோருக்கு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பெற்றோரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில், விடுவித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி