தமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

501shares

திருகோணமலை – சேருவாவில பகுதியில் தங்கம் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல இதனைக் குறிப்பிட்டார்.

சேருவாவில பகுதியில் தங்கம் இருக்கின்றமை உறுதி செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

சேருவாவில பகுதியில் 100 சதுர கிலோமீற்றர் ஆழத்தில், 5 சதுர கிலோமீற்றர் நீளத்தில் தங்கம் இருக்கின்றமை ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்திற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ இந்த அகழ்வு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள சிரமம் என கூறியுள்ள பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல, இந்த ஆய்வுகளை நடத்த விரும்பும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அகழ்வுகளுக்கான முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், இலங்கையின் கொள்கை மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு இதனை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!