வெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

1742shares

ஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடலை மீட்டு தரக் கோரி மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளராக மீன்பிடித்து வந்த நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட புயலால் மீனவர்கள் மாயமாகினர். பிறகு ஓமன் கடற்கரையில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் கண்டெடுக்க்கப்பட்டன.

டிஎன்.ஏ சோதனையில் இறந்தவர்கள் நம்புதாளை பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மற்றும் கார்மேகம் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில்தான், இன்றைத்தினம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!