யாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளூடாக வீதி அமைப்பு -மக்கள் பேரதிர்ச்சி

520shares

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா நாளை (17) இடம்பெறவுள்ள நிலையில்,இன்றையதினம் அந்தப்பகுதிகளை பார்வையிடச் சென்ற அப்பகுதி காணி உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய தினமே பொதுமக்கள் அந்த பகுதியை பார்வையிட இராணுவம் ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தது. இன்று விமான நிலையத்திற்கு சென்ற மக்கள், தமது காணிகளிலேயே விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன்- மயிலிட்டி சந்தி வரையான வீதியில் 400 மீற்றர் வீதியை இராணுவம் விடுவிக்க மறுத்து விட்டது. இராணுவத்தை சமாதானப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியும் இறுதிவரை வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது..

இதையடுத்து, அந்த வீதிக்கு பதிலாக, படையினர் அண்மையில் விடுவித்த தனியார் காணிக்குள்ளாக புதிய வீதியொன்றை இன்று துரிதகதியில் அமைத்து வருகிறார்கள். இதற்காக சுமார் 25 ஏக்கர் காணி மீள அபகரிக்கப்பட்டுள்ளது.விமான நிலையம் அமைக்கவோ, வீதி அமைக்கவோ தமது காணிகளை சுவீகரிப்பதாகவோ, அதற்கு நட்டஈடு தருவதாகவோ எந்த தகவலும் தராமல் காணிகளை அபகரித்துள்ளதாக, அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மற்றும், விமான நிலைய பாதைக்காக அபகரிக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் நாளை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாளை விமான நிலையம் திறப்பு நிகழ்வு நடக்கும்போது, இந்த எதிர்ப்பு போராட்டம் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது .

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி