தமிழர்கள் சென்ற விமானமொன்றில் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தம்!

741shares

திருச்சியிலிருந்து மலேசியா நோக்கி பயணிக்கவிருந்த விமானமொன்றில் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் ஏறிய பயணிகள் திடீரென மூச்சு திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதை அவதானித்த விமான ஊழியர்கள், உடனடியாக விமான நிறுவனத்திற்கு அறிவித்த நிலையில், விமான சேவை ரத்து செய்யப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.

விமானத்தின் ஒக்சிஜன் கட்டமைப்பு செயலிழந்துள்ளமையே இதற்கான காரணம் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

விமானம் பயணிக்கும் போது இந்த சம்பவம் நேர்ந்திருக்கும் பட்சத்தில், 120 பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விமானம் திருச்சியிலிருந்து செல்ல தயாரானதால் அதில் தமிழர்கள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
loading...