தமிழ் பாடசாலைக்கு சிங்கள அதிபர் நியமனம் -எதிர்த்து வீதிக்கு இறங்கிய மாணவர்கள்!

458shares

நுவரெலியா கல்விவலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகாவித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை தொடர்ந்து குறித்த வித்தியாலயத்திற்கு சிங்கள அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமையினால் வித்தியாலயத்தின் மாணவர்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது 21.10.2019.திங்கள்கிழமை காலை எட்டு மணியில் இருந்து முன்னெடுக்கபட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமையினால் நுவரெலியா அட்டன் போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டன. குறித்த வித்தியாலயத்திற்கு சிங்கள அதிபர் வேண்டாம் எனவும் முன்னர் இருந்த அதிபரை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் நுவரெலியா வலயகல்விப் பணிமனையின் கல்விப்பணிப்பாளர் அமரசிறி பியதாசவோடு தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு குறித்த அதிபரை இடமாற்றம் செய்யுமாறும் கொட்டகலை தமிழ் மகாவித்தியாலயத்திற்கு தமிழ் அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்தபிறகு குறித்த வித்தியாலத்தின் உப அதிபரின் ஊடாக குறித்த சிங்கள அதிபரை இடமாற்றம் செய்து தமிழ் அதிபரை நியமிப்பதாக வாக்குறுதி வழங்கிய பிறகு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...