வேட்பாளர்களுடன் பேரம் பேசி தமது பணப்பையை நிரப்ப முற்படும் தமிழ் கட்சிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்!

66shares

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காமல் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேரம் பேசி தமது பணப்பையை நிரப்ப முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தனித் தமிழீழத்தை தாம் எந்தவொரு தரப்பிடமும் கோரவில்லை என தெரிவிக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எந்த தரப்பும் தீர்ப்பை வழங்காத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் யாழ் ஊடக அமையத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வடபகுதி கடற்றொழிலாளர்கள் 18 பேரையும் விடுதலை செய்யுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அது குறித்து நடவடிக்கை எடுக்க இந்திய அரசும் சிறிலங்கா அரசும் தவறியுள்ளதாகவும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் குற்றம்சாட்டுகின்றார்.

.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி