சஜித்தினால் கைவிடப்பட்டுள்ள திட்டம்; மிக மோசமான அவலத்திற்குள் தமிழ் மக்கள்!

339shares

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவின் கட்டுப்பாட்டில் இருந்த வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள தேசிய வீடமைப்பு அமைச்சின் கீழ் மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட மாதிரிக் கிராமம் பாதியில் கைவிடப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்கள் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வீட்டுத்திட்டத்திற்காக தமது பழைய வீடுகளும் உடைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாலேயே தாம் மிக மோசமான அவலத்திற்குள் வாழவேண்டிய துர்பாக்கியத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக மன்னார் ஜிம்ரோநகர் கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜிம்ரோநகர் மக்கள் வருடாந்தம் ஏற்படும் வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் அதிக மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்த கிராமம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாசாவின் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் “அனைவருக்கும் நிழல்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் வீட்டுத் திட்டங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி மன்னார் ஜிம்ரோ நகர் கிராம மக்கள் அனைவரும் தமது வீடுகளை உடைத்து புதிய வீடுகளுக்கான அத்திவாரங்களை இட்டதுடன், சிலர் பகுதியளவில் கட்டி முடித்துள்ளனர். எனினும் அவர்களுக்கான நிதி இன்னமும் முழுமையாக வழங்கப்பட்டவில்லை.

இந்த நிலையில் நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஜிம்ரோ நகரில் மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது பழைய வீடுகளையும் உடைத்த நிலையில் புதிய வீடுகளும் இன்றி தற்போது அவல நிலைக்கு அப்பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

“ஜிம்ரோ நகரில் உள்ள அனைவருக்கும் வீடுகளை கட்டித்தருவதாக கூறியதால் அனைவரும் ஆயத்தமாகினோம். சிறிய சிறிய வீடுகளை அனைத்தையும் உடைத்துவிடுமாறு தெரிவித்தனர். இதற்கு புதிய வீடுகளை கட்டித்தருவதாக கூறினர். தற்போது இருக்கும் அளவில் பணம் தருகின்றோம் வீடுகளை கட்டுங்கள் எனத் தெரிவித்தனர். கடைசியில் என்ன செய்தனர். கட்டுமாறு தெரிவித்தவுடன் எங்களிடம் இருந்த நகைகள், பொருட்கள் அனைத்தையும் விற்றும் கடன் பெற்றோம். இதன்பின்னர் வீடுகள் அனைத்தையும் உடைத்தோம். கடைசியில் என்ன செய்தனர்? பணம் தருவதாக தெரிவித்து தெரிவித்து தற்போது இருந்த வீடுகளும் இல்லாமல் இருக்கின்றோம். நிம்மதியாக இருக்க முடியவில்லை. வீதி அமைத்து தருவதாக தெரிவித்தும் அமைக்கவில்லை. பாடசாலைகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. அனைவரும் நோய்வாய்ப்பட்டு காணப்படுகின்றோம். வயிறு வலிக்கின்றது. டெங்கு மலேரியா போன்ற நோய்களும் பரவுகின்றன. இவ்வாறு இருக்கும் போது பிள்ளைகள் எவ்வாறு பாடசாலை செல்வது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் வாழும் சுமார் 300 குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை ஜிம்ரோநகர் மாணவர்களும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைக்கு சென்றாலும், பாடசாலையை சூழவும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் அங்கும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சாந்திபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகம் நீரில் மூழ்கி இருப்பதன் காரணமாக மாணவர்கள் மலசல கூடங்களை பாவிப்பதற்கோ விளையாட்டு மைதானத்தை பாவிப்பதற்கோ முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்கு கேட்டும் வரும் அரசியல் வாதிகள் தற்போது இந்த பிரதேசத்தை பார்வையிட்டு வீதிகளை அமைத்து தந்தால் தாம் வாக்களிக்க தயாராக இருப்பதாக மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!