திடீர் பல்டி அடித்த தயாசிறி! காதைப்பிடித்து வெளியில் தள்ளுவதாக கூறிய அரசியல்வாதி! செய்திப்பார்வை

37shares

சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் போசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதாக தான் ஒரு போதும் கூறவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் தொடர்பில் கொழும்பிலுள்ள தனியார் வானொலியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சந்திரிகா குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவதாக நான் ஒருபோதும் கூறவில்லை. எனினும் மாநாட்டில் கலந்து கொண்ட தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினேன் என தெரிவித்துள்ளார்.

இம் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது. அதன்போது தேர்தல் காலங்களில் கட்சி சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் தயாசிறி தம்மை கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் முடிவு சரியாக அமைந்தால் அவரை காதைப்பிடித்து கட்சியிலிருந்து வெளியில் தள்ளுவோம் என குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

யாழில் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்த பெண்! காலில் விழுந்து கதறிய நபர்

யாழில் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்த பெண்! காலில் விழுந்து கதறிய நபர்