பிரான்ஸ் செல்ல முயன்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

674shares

பிரான்ஸ் நோக்கி பயணிக்க முற்பட்ட 06 பேர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக படகு மூலம் பிரான்ஸ் நோக்கி பயணிக்க முற்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படகு மூலம் குறித்த நபர்கள் பயணிக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டதுடன் சிலாபம் - பத்துலுஒய இரனவில பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க