இலங்கையில் இதுவரை கண்டிராத ஆச்சரியம்! இன்று திறக்கப்படுகின்றது!

391shares

பெலவத்த - அக்குரேகொடயில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைத் தலைமையகத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் நோக்குடன் 77 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கையில் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய கட்டட நிர்மாணத் திட்டம் இதுவாகும்.

இதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைத் தலைமையகத்திற்கு 2011 மார்ச் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது. இதற்கான உத்தேச செலவு 53.3 பில்லியன் ரூபாவாகும்.

அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகளையும் இந்த கட்டடத்தொகுதி கொண்டுள்ளது.

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இதன் நிர்மாணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சு, முப்படைத் தலைமையகம் ஆகிய கட்டடத் தொகுதிகளின் முதற் பணிகள் நிறைவு செய்யப்பட்டு திறந்து வைக்கப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கை இராணுவ தலைமையகத்தின் கீழ் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தலைமை அலுவலகங்கள் விரைவில் இந்த கட்டடத்தொகுதிக்குள் கொண்டுவரப்படவுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!