கோட்டாபய ராஜபச்சவை ஆதரித்து நடைபெற்ற கூட்ட மேடை நோக்கி வீசப்பட்டன கற்கள்!

326shares

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேசிய காங்கிரஸின் பொதுக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காாங்கிரஸ் ஆதரவாளர்களினால் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மேடையை நோக்கி கற்களும் வீசப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிரசார மேடையில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பேசிக் கொண்டிருக்கும் போது சத்தம் போட்டு இடைஞ்சல்கள் ஏற்படுத்தியதோடு, சில நிமிடங்கள் அமைதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சரின் கூட்டத்தினை நிறுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தெரிவித்தார்.

பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அமைதியற்ற சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை