கோத்தாபயவை ஆட்சிபீடம் ஏற்ற உதவினால்.. தமிழ் மக்களுக்கு கருணா அளித்துள்ள வாக்குறுதி!

45shares

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவிற்கு ஆதரவு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் அவர்கள் தொடர்பில் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் எதிர்வரும் தேர்தல்களில் கிழக்கில் மாத்திரமன்றி வடக்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா கூறியுள்ளார்.

அதேவேளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்து அவரை ஆட்சிபீடம் ஏற்ற உதவினால், தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தன்னால் மேற்கொள்ள முடியும் என்றும் கருணா வாக்குறுதி அளித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைகுடியிருப்பு பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (6) நண்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு முல்லைத்தீவு உட்பட வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என்றும் அடித்துக்கூறும் கருணா, இதனால் கிழக்கில் வாழும் தமிழ் மக்களையும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுபெற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்காக தைரியமாக செயற்படக்கூடியவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கருணா கேட்டுக்கொண்டார்.

அதனைவிடுத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்க விடாது, தமிழர்களின் உரிமைகளை பறித்தெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் முஸ்லீம் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவிற்கு துணை போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அதிகாரத்தை கொடுப்பதால் எதனையும் சாதித்துவிட முடியாது என்றும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்