மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

44shares

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களை கடமை செய்யவிடாது தாக்கி காயப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார சபை ஊழியர்கள் கடமையின் பொருட்டு சென்றிருந்த போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று கண்மூடித்தனமாக தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் சிலரை தொடர்ச்சியாக கைது செய்திருந்த போதிலும் பிரதான சந்தேகநபரை கைது செய்திருக்கவில்லை.

எனவே மின்சாரசபை ஊழியர்கள் பிரதான சந்தேக நபரை கைது செய்யுமாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இந் நிலையில் பிரதான சந்தேக நபர் தனது சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்தார்.

பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேர் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு அடையாள அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்