இந்திய புகையிரத கடவைகளில் காத்திருக்கும் எம தர்மராஜா!

50shares

இந்தியாவின் மேற்குப் பகுதியில் எம தர்மராஜா போன்று வேடம் அணிந்து, ரயில் கடவைகளில் மற்றும் தண்டவாளங்களில் பயணம் மேற்கொள்வோர் எம தர்மராஜா வேடம் அணிந்திருப்பவரால் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவில் ரயில் கடவைகளை கடப்பதோ அல்லது அதில் பயணிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் கடவைகளை கடப்பது உயிர் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

இந் நிலையில் ரயில் தண்டவாளங்களில் மக்கள் பயணிப்பதையும் கடப்பதையும், தடுப்பதற்காக இந்திய ரயில்வே திணைக்களம் தனித்துவமான பிரசாரமொன்றை முன்னெடுத்து வருகின்றது.

அந்த பிரசார நடவடிக்கையாகவே தண்டவாளங்களிலும் கடவைகளிலும் பயணிப்போரை பாதுகாக்கும் நோக்கில் எம தர்மராஜா வேடம் அணிந்த நபர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மேற்குப் பிராந்தியத்தில் ரயில் கடவைகளை கடக்க முயன்ற 721 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மக்களின் உயிர்களை காப்பாற்றும் இந்த எம தர்மராஜாவின் செயல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருவதுடன் பெரும் பாராட்டையும் பெற்று வருகின்றது எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி