எத்தடை வரினும் கார்த்திகை 27 அனுஸ்டிக்கப்படும்! அழைப்பு விடுத்துள்ள குழுவினர்!

32shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒட்டி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகளில் மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி எந்தவித அச்சங்களும் இன்றி அனைத்து மக்களும் மாவீரர்களை நினைவுகூர வருமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

குறித்த விடையம் தொடர்பில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலம் இல்லத்தின் பணிக்குழு தலைவர் ஈசன் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்தில் மரணித்த மாவீரர்களின் நினைவுநாள் நவம்பர் 27 இல் இடம்பெறவுள்ளது. அந்த நாளை உணர்வெளிச்சியுடன் கடைப்பிடிப்பதற்கு மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு ஒத்துளைப்புடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த துயிலும் இல்ல வளாகத்தில் பல பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் இங்கிருக்கின்ற தாயக உறவுகள் மற்றும் பொது அமைப்புக்கள் வருகை தந்து மிகுதியாக இருக்கின்ற பணிகளையும் பூர்த்தி செய்து கார்த்திகை 27ல் மாவீரர் நாளினை சிறப்பாக செய்வதற்கு ஒத்துளைப்பு வழங்குமாறு கோருகின்றேன்.

இன்றைய அரசியல் சூழ்நிலையானது பல நெருக்கடிகளும் பல சிக்கல்களும்,பல கற்பனைகள் வியூகங்களின் மத்தியிலும், துயிலும் இல்ல நிகழ்வுகள் இடம்பெறுமா என்ற கேள்விக்கு மத்தியிலும் எமது நிர்வாகத்தினர் இந்த நிகழ்வினை நிச்சயமாக கடைப்பிடித்தே தீருவோம் என்ற அயராத உறுதியுடன் செயற்படுகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,

எமது இந்த முயற்சி வீண்போகாது நிச்சயமாக மாவீரர்களின் நினைவு நாள் கார்த்திகை 27 நடைபெற்றே ஆகும் அதற்கான சகல ஒழுங்கு படுத்தல்களையும் செயற்பாட்டுக்குழு ஆகிய நாங்களும் இங்குள்ள தாயக உறவுகள் புலம்பெயர் உறவுகள் பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

வழமை போன்றே மாவீரர்களின் வழிபாட்டுத் தினமான கார்த்திகை 27 ஆம் நாள் நிச்சயமாக நடைபெறும். அனைத்து உறவுகளும் எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த பெற்றோர்கள் உறவினர்கள்,தவறாது சமூகம்கொடுத்து உங்கள் பிள்ளைகளின் தீபங்களை ஏற்றி வணக்கம் செலுத்த வருமாறு அனைத்து உறவுகளையும் அன்பாக வேண்டி நிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்