சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது மனோ-ரிஷாட் அணியினரிடையே முறுகல்!

44shares

மன்னாரில் இன்று (08) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, சலசலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

அமைச்சர்களான மனோ கணேசன், மற்றும் ரிஷாட் பதியூதின் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையாலேயே இந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

குறித்த பிரசார கூட்டத்தின் ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் ரிஷ்கான் பதியூதினுக்கும், அமைச்சர் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி/தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே முறுகல் ஏற்பட்டுள்ளது.

மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது உள்ளிட்ட விடயங்களில் நேற்று (07) இரவு முதல் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் பிரசார மேடையில் ஜனகன் விநாயகமூர்த்தி அமர்வதற்கு இடம் ஒதுக்க ரிஷாட் அணியினர் மறுப்பு தெரிவித்தை அடுத்து, இரு அணிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தமைக்கு, அமைச்சர் மனோ கணேசன் தனது உரையின்போது நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் அமைச்சர் ரிஷாட் பதியுதின் அணியினரை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஊடாக மேலும் அறியமுடிகிறது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்