கோத்தபாயவுடன் மேடை ஏறினார் ரணிலின் அமைச்சர்

  • Dias
  • November 08, 2019
265shares

வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு தனது ஆதரவினை வழங்கியுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இன்று பொலன்னறுவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்த வசந்த சேனாநாயக்க, கோத்தபாய ராஜபக்ஷவின் பிரச்சார மேடையில் ஏறி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...