யாழில் நள்ளிரவில் வைத்தியரின் வீட்டிற்கு நேர்ந்த கதி! விசாரணைகள் தீவிரம்

  • Dias
  • November 08, 2019
472shares

யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் வீட்டை அடித்து நொருக்கி வீட்டின் முன்பாக இருந்த வாகனத்தையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சித்த மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

வீட்டினை மேற்பார்வை செய்ய சென்றுள்ளார். இதன்போது வீட்டில் இருந்து நெருப்பு எரிவதனை அவதானித்த அவர் அயலவர்கள் தீ அணைப்பு சேவைக்கு சுமார் 10மணியளவில் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனால் நேற்று 10.15 மணியளவில் குறித்த வீட்டினையடைந்த தீ அணைப்பு பிரிவினர் நீண்ட முயற்சியில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டினை சோதனையிட்ட சமயம்

வீட்டின் முன் கதவு உட்பட சகல அறை கதவுகளும் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த கட்டில்கள் , அலுமாரிகள் , தொலைக்காட்சிப் பெட்டி , கணனி மற்றும் தளபாடம் அனைத்தும் கொத்தி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த சம்பவத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளமை அவதானிக்க முடிவதோடு குறித்த வன் செயல் காரணமாக குறித்த வீட்டிற்கு 25 லச்சத்திற்கும் மேற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி வீட்டுகார்ர்கள் அவசர தேவையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ள நிலையில் வீட்டில் யாருமில்லாத்தால் வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!