சமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு வருகின்றது ஆபத்து

32shares

சமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்காக 500 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் போதுமான காஸ் சிலின்டர்கள் தற்சமயம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்ட்டுள்ளன.

சமையல் எரி வாயுவை கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இன்றும் கூட சில இடங்களில் சமையல் எரிவாயுவை வாங்குவதற்கு பலர் வரிசையில் நின்றதுடன், பற்றாக்குறை காணப்படுவதையும் எம்மால் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

இதையும் தவறாமல் படிங்க