நீதிமன்ற வளாகத்தில் வைத்து வசமாக சிக்கிக்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்

25shares

நபர் ஒருவரிடமிருந்து 4,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர் (Development Officer) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேகநபர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (கணக்கு உதவி) ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றில், பிணை பணத்தை விடுவிப்பதற்காக, ரூ. 5,000 பணத்தை கோரியுள்ள குறித்த சந்தேகநபர், அதில் ரூ. 4,000 பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த வேளையில், குறித்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி