தேர்தல் நெருங்கும் காலத்தில் தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! பீதியில் மக்கள்

20shares

பாதுக்க, கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு குறித்த பிரதேசத்திலுள்ள மதுபான சாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய தர்ஷன லசந்த என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அவ்வுணவகத்தில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த குறித்த நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் இக்காலக்கட்டத்தில் பல இடங்களிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இவ்வாறான நேரத்தில் நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்