அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றாக தீர்வு! ஒரே தேர்வு சஜித் - ரவூப் ஹக்கீம்!

15shares

ஜனாதிபதி தேர்தலின் மூலம் அனைத்து பிரச்சினைகளும் முற்றாக தீர்க்கப்பட்டுவிடும் என்று எவரும் எண்ண முடியாது. எங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி ஒருபோதும் அழிந்து போகாது. அவ்வாறு யாரும் கனவு காண வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் பிரச்சார கூட்டம் புத்தளத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டின் சுபீட்சமான நிம்மதியான வாழ்கைக்காகவும், எதிர்காலத்தில் அரசியல் நெறிமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்து பிரசார கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் என்னோடு பேச வேண்டும் என செய்தி அனுப்பியிருந்தார். அவர் ஏற்கனவே, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கிவரும் நிலையில், என்ன விடயம் தொடர்பில் என்னுடன் பேச வேண்டும் என கேட்கப்பட்ட போது, எதிர்வரும் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு முதல் வாக்கை வழங்குவதில் அழுத்தமொன்றை கொடுத்துவரும் நாங்கள், இரண்டாவதாக வழங்கப்படும் வாக்கை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவது பற்றி உங்களோடு கலந்தாலோசிக்க விரும்புகின்றோம் என கூறியுள்ளார்.

நான் அதற்கு பதிலளிக்கையில், இரண்டாவது வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறிவிட்டேன். ஏனெனில், இது வெறுமனே பூச்சாண்டி காட்டும் கதையாகவுள்ளது. சஜித் பிரேமதாஸவை தோற்கடிப்பதற்கான ஒரு யுக்தியாகவே இதனை நோக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அல்லது வேறு எந்த தரப்பினர் ஆனாலும் எதிரணியின் கூலிப்படைகளாக தான் நாங்கள் அவர்களை நோக்குகின்றோம். என்றார்.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்