யாழ் புகையிரத நிலையத்தில் புலம்பெயர் தமிழ் ஒருவர் அமைத்துக்கொடுத்துள்ள நூலகம்!!

250shares

யாழ் பிரதான புகையிர நிலையத்தில் பயணிகள் பாவனைக்கென்று ஒரு நூலகத்தை புலம்பெயர் தமிழர் ஒருவர் அமைத்துக் கொடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் வசித்துவருபவரும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான திரு சுரேஸ் கணபதி என்பவரே இந்த நூல் நிலையத்தை அமைத்துக்கொடுத்துள்ளார்.

இந்த விடய் தொடர்பாக சுரேஸ் கணபதி கருத்துத் தெரிவிக்கையில், ‘1980 களில் தனது பெற்றோர் கண்டியில் பணியாற்றிய காலங்களில் அடிக்கடி யாழ்தேவியில் தான் பயணித்து இருந்ததாகவும், யாழ் புகையிர நிலையம் தனக்கு ஒரு வீடுபோன்ற உணர்வை தந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அப்போது ஒரு அறையில் மாத்திரம் பத்திரிகை புத்தகங்கள் இருந்ததாகவும், புகையிரம் தாமதமாகும் பட்சத்தில் அது மக்களுக்கு மிகவும் பயனபட்டதாகவும், அந்த நினைவுகள் இன்றும் தனது மனதில் இருப்பதனாலும், ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்ற கனவு நீண்ட காலமாக இருந்துவந்ததாலும், அதனை தற்பொழுது தான் நிறைவேற்றி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

யாழ் புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் பயணிகள் மாத்திரம் அன்றி ஏராளமான மாணவர்கள், இளஞர்கள் மாலை நேரங்களில் புத்தகங்களை வாசிப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்