சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்று நம்பும் மக்கள் சஜித் பக்கமே!

7shares

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்று நம்பும் மக்கள் அன்னத்துக்கு வாக்களிப்பர் என சாய்ந்தமருதில் ஏ.சி யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளரும், அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும், யஹியாகான் பௌண்டேஷன் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான ஏ.சி யஹ்யாகானின் இல்லத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து பிரசார காரியாலயம் வெள்ளிக்கிழமை (8) மாலை 6 மணியளவில் திறந்து வைக்கும் போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது கருத்தில்...

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்று நம்பும் எமது சாய்ந்தமருது பிரதேச மக்கள் அன்னத்துக்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர். எனவே சுயேட்சைகுழு உறுப்பினர்களும் ஜுப்பள்ளிவாசல் நிர்வாகமும் ஏற்கனவே எடுத்த பல பிழையான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாறாக இன்று ஏனைய பிரதேச வாத அமைப்புகளும் பல அரசியல் கட்சிகளின் அடியாட்களுடன் இணைந்து பிரதேச சபை முன்னிறுத்தி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை உடைத்தெறிந்து சாய்ந்தமருது மக்களின் நலன்கருதி ஜூம்மாப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினர் உயிரோட்டமான முறையிலும் கட்சி பேதங்கள் அற்ற நிலையிலும் செயற்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனெனில் நம்பிக்கையாளர் சபையினரின் அதிகாரம் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள அனைத்து பொதுவிடயங்களையும் வெற்றி கொள்ள பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வெறுமனே புகழுக்காக மட்டும் நம்பிக்கையாளர் சபையில் அங்கம் வகிப்பவர்கள் சாய்ந்தமருது மக்கள் விடயத்தில் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படல் வேண்டும்.

அரசியல் கட்சிகளின் அடிவருடிகள் சீர்குலைக்க முற்ப்படல் நம்பிக்கையாளர் சபையினர் திடாகாத்திரமான முறையில் செயற்ப்பட்டு பிரதேச சபையை வென்றெடுப்பதில் முழுமூச்சாக இருக்கிறது. அத்தோடு வர்த்தக சமூகம் வர்த்தக சங்கங்கள் பொது அமைப்புகள் இளைஞர் அமைப்புகள் போன்றோர்களை அவசரமாக அழைத்து பிரதேச சபை சம்பந்தமாக ஆலோசனைகளை பெற்று மக்களின் தேவைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தும் எதிர்கால தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதி அமைச்சர் பைசால் காசிம் உள்ளிட்ட பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை