துப்பாக்கியால் பதிலளிக்க மாட்டோம் - யாழில் சரத் பொன்சேகா!

83shares

இலங்கை இராணுவம் மக்களை கொல்வதற்கும் அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்படாத ஒரு பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்குவோம். எங்கள் ஆட்சியில் தண்ணீர் கேட்டவா்களுக்கும், ஈ.பி.எவ் கேட்டவா்களுக்கும், மண்ணெண்ணை கேட்டவா்களுக்கும் துப்பாக்கியினால் பதிலளிக்க மாட்டோம் என அமைச்சா் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட் பாளா் சஜித் பிறேமதாஸவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

கோட்டாபாய ராஜபக்சவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பலா் இங்கே முயற்சிக்கிறாா்கள். அவா்கள் தொடா்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். மக்கள் உங்கள் வாக்குகளை எங்களுக்கு வழங்கவேண்டும்.

பாதைகளை அமைத்துக் கொடுத்து அதிலிருந்து கொமிஸன் பணத்தை எடுத்ததுதான் ராஜபக்சக்கள் செய்த காாியம். ஆனால் சஜித் பிறேமதாஸவின் ஆட்சியில் அவ்வாறானதொரு நிலை இருக்காது. விவசாயம், கடற்றொழில் மேம்பாடு, கல்வி மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். நாங்கள் பொய்களை கூற விரும்வில்லை. செய்ய முடிந்தவற்றையே கூற விரும்புகிறோம்.

போாினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக ஒரு நாட்டில் அமைதியான வாழ்க்கையை நான் விரும்புகிறேன். என்னை தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்கும் படி சஜித் கூறியுள்ளாா். நான் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்றால் நாட்டில் உள்ள சகலரையும் ஒன்றிணைப்பேன்.

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை ஒத்த தாக்குதல்கள் இடம்பெறாது. இராணுவம் மக்களை கொல்வதற்கும், மக்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்படாது. தண்ணீா் கேட்பவா்களுக்கும், ஈ.பி.எவ் கேட்பவா்களுக்கும், மண்ணெண்ணை கேட்பவா்களுக்கும் துப்பாக்கியால் பதிலளிக்கப்படாது என்றாா்.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி