யாழில் விஜயகலாவுடன் இணைந்து சமாதான புறாவை பறக்கவிட்ட சஜித்!

25shares

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஐித் பிரேமதாச தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சமாதானப் புறவாக வெள்ளைப் புறாவொன்றை பறக்கவிட்டுள்ளார்.

ஐனாதிபதித் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சஐித் பிரேமதாச வடக்கிற்கு இன்று (8) விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த சஐித் பிரேமதாச யாழ் சங்கிலியன் பூங்காவில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இக் கூட்டத்தின் போது விஜயகலாவின் ஏற்பாட்டில் சமாதானப் புறாவாக வெள்ளைப் புறாவொன்றையும் அமைச்சர்கள் ஆதரவாளர்களுடன் இணைந்து பறக்கவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்களான சரத் பொன்சேகா, ரிஷாட் பதியூதீன் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உட்பட கட்சிப் பிரமுகர்களும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


You May Like This
இதையும் தவறாமல் படிங்க
loading...