முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்! இன்று நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

59shares

அண்மையில் குருகந்தை ரஜமகா விகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியையை விகாரை வளாகத்தில் அடக்கம் செய்யக் கூடாது என முல்லைத்தீவு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறியும் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து இந்த செயற்பாட்டிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 3 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (8) உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் கொண்ட குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக ஞானசார தேரர், முல்லைத்தீவு பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
loading...