இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் வடக்கில் வாயே திறக்காத சஜித் !

17shares

தேர்தல் பிரசாரத்திற்காக வடக்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காதமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சஜித் பிரேமதாக வடக்கிற்கு நேற்றையதினம் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாசா யாழ் சங்கிலியன் பூங்காவில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

எனினும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளான அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கல், காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்தவொரு பிரச்சனைகள் குறித்தும் ஏதும் பேசவில்லை.

இதே போன்றே வடக்கில் இடம்பெற்ற ஏனைய கூட்டங்களிலும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்களான சரத் பொன்சேகா, ரிஷாட் பதியுதீன் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உட்பட கட்சிப் பிரமுகர்களும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க