இதுவரையான சவால்களில் வெற்றி : ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி நிச்சயம்!

23shares

ஸ்ரீலங்காவில் மீண்டுமொரு தீவிரவாதம் மற்றும் இனவாதம் மீளுருவாகாத வகையில் புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையை பலப்படுத்தி செயற்திறன்மிக்கதாக மாற்றுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுவரை தனக்கு கிடைத்த சவால்கள் அனைத்திலுமே வெற்றிகொண்டதாகவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தனது வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பொலனறுவையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகத்தலைவரும், முதல் பிரதமருமான டீ.எஸ்.சேனாநாயக்கவின் பேரனான நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டு, கோட்டாபய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை அறிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி – ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க எம்முடன் இணைந்துகொண்டுள்ளார். அவர் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டே எம்முடன் கரம் கோர்த்திருப்பது உண்மையாகும். பொலனறுவை மக்கள் பல வருடங்களாக தீவிரவாதத்திற்கு முகங்கொடுத்தவர்கள். திரும்பவும் மக்கள் போருக்கு முகங்கொடுப்பதை விரும்பமாட்டார்கள். போரினை முடிவுறுத்தி மக்கள் சமாதானமாக வீடுகளில் வாழ்க்கையை நடத்திச்செல்லும் சூழலை உருவாக்கி மீண்டும் தீவிரவாதம் உருவாகாத வகையிலான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்தியிருந்தோம்.

எனினும் துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் குண்டுகள் வெடிக்க ஆரம்பித்தன. அன்று தீவிரவாதத்தை ஒழித்ததைப் போன்று இந்த நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பிற்கு முதன்மைத்துவம் கொடுத்து தெளிவான வேலைத்திட்டத்தை அமுல்செய்து புலனாய்வுப் பிரிவை மீண்டும் செயற்திறனாக மாற்றி பாதுகாப்பு பிரிவை உறுதிப்படுத்தி மீண்டும் தீவிரவாதம் தலைதூக்காமலிருக்க பாதுகாப்பை உறுதிசெய்வோம்.

எமது அரசாங்கத்திற்குள் மீண்டுமொரு தீவிரவாதம், இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம். இந்த நாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பி வறுமையை ஒழிப்போம். எப்போதும் நாங்கள் சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்கள் என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்” என்றார்.

இதேவேளை இந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தங்களுக்குப் பெரும் பிரச்சினையாகவுள்ள யானைகளை உடனடியாக வெளியேற்றுவதாகக் கூறினார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதலிருந்தே தேர்தலுக்கு பயப்படுகிறது. பிரதேச சபைத் தேர்தல்களை வருடக்கணக்காக இழுத்தடிப்பு செய்தே நடத்தியது. அதிலும் நாங்கள் 71 சதவீத சபைகளைக் கைப்பற்றினோம். அதன் பின்னர் நடத்திய எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை 58 வீதத்தால் கைப்பற்றினோம். எனினும் அந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதில் தனித்துப் போட்டியிட்டபடியினால் 14 வீதத்தைப் பெற்றுக்கொண்டது. அதற்கமைய 70 வீதத்தில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலைக் கைப்பற்றிக்கொண்டோம். அதில் விசேடத்துவம் என்ன? சஜித் பிரேமதாஸ முதற்தடவையாக ஜனாதிபதி வேட்பாளர் பதவியைப் பெற்று நடத்திய முதலாவது தேர்தலான எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் படுதோல்வியை அடைந்தார். 24 வீதத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றது. இதுதான் உண்மைநிலை.

ஆகவே தற்போது நான்கு கால்களைக்கொண்ட யானைகளிடத்தில் இருந்தும் அதேபோல இரண்டு கால்களுடைய யானைகளிடத்தில் இருந்தும் பிரச்சினைகள் உருவெடுத்திருக்கின்றன. அவற்றை நாங்கள் வெற்றிகொண்டு இரண்டு மற்றும் நான்கு கால்கள் யானைகளை வெளியேற்றுவோம் என கூறுகிறேன்” என்றார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்