தென்பகுதியில் தொடரும் துப்பாக்கிசூடு - ஒருவர் சாவு

16shares

தென்பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸஸார் தெரிவித்தனர்.

மதுபானசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கலகெதர பிரதேசத்தை சேர்ந்த தர்ஷன லசந்த (வயது 39) என்பவரே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மஇந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!