கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட சிக்கல்!

68shares

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டதாகவும் குறிபபிடப்படுகின்றது.

இந்த மின் வெட்டு சிலமணி நேரம் நீடித்ததால் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், விமான நிலையத்தின் A/C அமைப்பு மற்றும் விமான நிலைய தொலைபேசி வலையமைப்பும் முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வெளிநாடுகளுக்கு செல்வோரும், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தினுள் நிறுவப்பட்டுள்ள தானியங்கி ஜெனரேட்டர் அமைப்பு இயங்காததன் காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் காலை 9​.20 மணியளவில் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி