கிளிநொச்சியில் வீடு புகுந்து தாக்குதல் - நால்வர் படுகாயம்

169shares

கிளிநொச்சி மாவட்டம் தட்டுவன் கொட்டி பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தட்டுவன் கொட்டி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் முயற்சியில் அப்பகுதியில் கடயைாற்றிய கிராமசேவகர் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்றையதினம் அவரின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத ஏழு பேர் கொண்ட நபர்கள் வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதுடன் வீட்டின் மீதும் கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கிராம சேவையாளரின் இரு சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் ஒன்று விட்ட சகோதரர் ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

இதேவேளை சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களின் அச்சுறுத்தலினால் குறித்த கிராம சேவகர் தனது சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்